அதிக மழையுடனான வானிலை; 5 பேர் உயிரிழப்பு.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

அதிக மழையுடனான வானிலை; 5 பேர் உயிரிழப்பு..

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதனிடையே இருவர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார். 
 மழையுடனான வானிலையினால் 1,143 குடும்பங்களை சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று 635 வீடுகள் பகுதியளவிலும் 12 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 09 பாதுகாப்பு அரண்களில் இதுவரை 257 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம்  சுட்டிக்காட்டியுள்ளது.




About UPDATE